நலம் நல்கும் -செம்பருத்தி நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர். எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி. செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது. உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அம...
if you want to keep up with all the news on jtechtamiltip that we post, make sure you follow us