முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்

 மாட்டுப்பொங்கல்

மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும்.

பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல்
உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல்

பெரும் செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி
அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்

 மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது 

தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல்

பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர்

இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு

வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி மனப்பர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

jallikattu : ஜல்லிக்கட்டு : தமிழர்களின் வீர விளையாட்டு

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுகளில் விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு   ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் ஜல்லிக்கட்டு   தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தனித்துவமாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் வழக்கம் இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது பின்னர் அதுவே பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டில் என்று அழைக்கப்பட்டது மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணம் முடிப்பு பரிசளிக்கப்படும் தைப்பொங்கல் திருநாளில் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் குளிர ...

Hibiscus natural medicine : செம்பருத்தி : சீன ரோஜா

  நலம் நல்கும் -செம்பருத்தி நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது  வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர். எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.                  செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.                நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.               உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அம...

celebrating pongal festival in tamilnadu : பொங்கல் பண்டிகை

  பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை          உழவுத் தொழிலுக்கும்,   உழவர்களுக்கும்,   மரியாதை செலுத்தும் திருநாள்    பொங்கல் திருநாள்.   தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.