முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

celebrating pongal festival in tamilnadu : பொங்கல் பண்டிகை

 பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை 

       உழவுத் தொழிலுக்கும்,  உழவர்களுக்கும்,  மரியாதை செலுத்தும் திருநாள்  பொங்கல் திருநாள். 

தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.


நாட்டின் முதுகெலும்பான, உழவுத் தொழிலுக்கும்,  உதவிய சூரியனுக்கும், இயற்கைக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது.

 ஆடி மாதத்தில் விளைந்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த     புது அரிசியில் பொங்கல் செய்யப்படும்

 பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துவார்கள்

அதிகாலை எழுந்து மெழுகி, முற்றம் கோலம் இட்டு அதன் நடுவில் 

பானை வைப்பர். 

புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், காய் கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

கோலமிட்ட இடத்தில் தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

மண்பானையில்அரிசி, பால், பச்சை பயிறு, வெல்லம், உலர் பழங்கள் போன்றவற்றை பொங்கலுக்கு பயன்படுத்துவர்.

பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன் தலைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று உரக்கக் கூறுவர்.

முதற் பயனை கதிரவனுக்கு படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வார்.

பொங்கலோ பொங்கல் என்று உரக்க கத்தி தங்கள் மகிழ்ச்சியை அருகில் உள்ள இல்லங்களுக்கும் ஓடிச்சென்று தங்கள் அன்பை பரிமாறி கொள்வர்.

பொங்கல் நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது 

போகிபொங்கல் 

தை பொங்கல் 

மாட்டுப் பொங்கல் மற்றும் 

காணும் பொங்கல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

jallikattu : ஜல்லிக்கட்டு : தமிழர்களின் வீர விளையாட்டு

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுகளில் விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு   ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் ஜல்லிக்கட்டு   தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தனித்துவமாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் வழக்கம் இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது பின்னர் அதுவே பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டில் என்று அழைக்கப்பட்டது மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணம் முடிப்பு பரிசளிக்கப்படும் தைப்பொங்கல் திருநாளில் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் குளிர ...

Hibiscus natural medicine : செம்பருத்தி : சீன ரோஜா

  நலம் நல்கும் -செம்பருத்தி நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது  வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர். எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.                  செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.                நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.               உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அம...