முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Republic day : குடியரசு தினம்

 ஜனவரி 26 குடியரசு தினம் 

                           குடியரசு என்றால் மக்களாட்சி என்று பொருள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையே குடியரசு ஆட்சி முறையாகும்.

         இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாக அமைந்ததைக் கொண்டாடும் நாள் தான் குடியரசு தினம்.

          1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலச்சாரி ஜனவரி 26 ஆம் தேதி காலை 10:18 மணிக்கு இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்தார்.

          பின்னர் இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.

          அப்போதைய அரசு மாளிகை மற்றும் இன்றைய ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் அரங்கில் அவர் பதவியேற்ற பிறகு 10:30 மணிக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பிற்பகல் 2.30 மணியளவில் அரசு மாளிகையில் இருந்து இர்வின் மைதானத்திற்கு குடியரசு தலைவரின் வாகனம் புறப்பட்டது. 

           அந்த வாகனம் டெல்லி கன்னாட் பிளேஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சுற்றி மாலை 4.45 மணி அளவில் வீர வணக்க மேடையை அடைந்தது. பின்னர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் ஆறு ஆஸ்திரேலியா குதிரைகள் பூட்டிய சாரட் அலங்கார வாகனத்தில் ஏறினார். குடியரசு அணிவகுப்பை காண இர்வின் ஸ்டேடியத்தில் சுமார் 15,000 நபர்கள் வந்திருந்தனர். இர்வின் மைதானத்தில் குடியரசு தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பில் முப்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

            இந்தோனேசிய அதிபர் சுகர் னோ முதல் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குடியரசு நாளின் போது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் சிறப்பு நாளாகும்.

           1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடாக அறிவிக்கப்பட்ட போதும் இந்திய நாட்டிற்கான நிரந்தரமான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த முனைவர் திரு.பி.ஆர். அம்பேத்கார் அவர்களிடம் ஒப்படைத்தார். 

          திரு.பி.ஆர். அம்பேத்கார் மற்றும் அவரது குழுவினர் தங்களது அயராத உழைப்பினால் 1950 ஜனவரி 24ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவை நாடாளுமன்ற குழுவிடம் ஒப்படைத்தார். 

         இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 26 ஆம் தேதி தான் அந்த அரசியல் அமைப்பு சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தது. இந்த தினமே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின கொண்டாட்டம் ஜனநாயகம் மற்றும் தனிநபர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை நினைவூட்டுகிறது.

        மக்களாட்சி மற்றும் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் கொள்கைகளை முன் வைக்கும் ஒரு முக்கியமான ஆவணமே இந்திய அரசியலமைப்பு ஆவணம்.


இந்திய அரசியலமைப்பு இந்திய குடிமக்களுக்கு ஆறு அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

1. சமத்துவத்திற்கான உரிமை

2. சுதந்திரத்திற்கான உரிமை

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை

4. மத சுதந்திரத்திற்கான உரிமை

5. கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள்

6. அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை


1951ம் ஆண்டு முதல் நாட்டினரின் அதிக பங்கேற்ப்பிற்காக கிங்ஸ் -வேயில் அதாவது இன்றைய ராஜ் பாத்தில் குடியரசு தின விழா தொடங்கியது.

முதல் முறையாக ராணுவ இசைக் குழு மகாத்மா காந்தியின் விருப்ப பாடலான "என்னுடன் இருங்கள்"என்ற பாடல் மெட்டுக்கு இசைத்தது.

1953 லவ் முதல்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் நாட்டுப்புற நடனம் மற்றும் வாண வேடிக்கை சேர்க்கப்பட்டது.

1956-ல் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் ஐந்து அலங்கரிக்கப்பட்ட யானைகள் பங்கேற்றன.

1959 ஆம் ஆண்டு முதல் முறையாக குடியரசு தின விழாவில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பார்வையாளர்கள் மீது மலர் மழை பொழியப்பட்டது.

குடியரசு தினம் ஒரு தேசிய விழா. குடியரசு தினம் கொண்டாடப்படும் ஜனவரி 26 ஆம் நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குடியரசு தின கொண்டாட்டம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திர உணர்வை கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், மொழி மற்றும் கலாச்சாரம் போன்ற வேறுபாடுகளை மறந்து விடுகிறார்கள்.

நன்றி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.     மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையா

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:     மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

mattu pongal : மாட்டுப் பொங்கல் :உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள்

  மாட்டுப்பொங்கல் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளன மாட்டுப்பொங்கல் உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் மாட்டுப் பொங்கல் பெரும் செல்வமாக கருதும் மாடுகளை உழவர்கள் குளிப்பாட்டி அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வர்ணங்கள் பூசி, நெத்தியில் மஞ்சள் பூசி, குங்குமம் பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்   மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும் இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது   தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவே மாட்டுப் பொங்கல் பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என பெயர் இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதன் உடம்பில் சிறு காயம் கூட ஏற்படா வண்ணம் நடைபெறுவதே இதன் சிறப்பு வெற்றி பெறும் ஆடவரை பெண்கள் விரும்பி   மனப்பர்