முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

pogi pandigai ; போகி பண்டிகை

 

 போகி பண்டிகை: pogi pandigai

மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படும் பண்டிகை  


 போகி பழையன கழித்து புதியன புகுதல்

போகிப் பண்டிகை அன்று வீடுகளை சுத்தம் செய்து குப்பைகள் மற்றும் பயனற்ற பொருட்கள் அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்துவர்

போகிப் பண்டிகை என்று வேப்பிலை, பளை பூ , மற்றும் ஆவாரம் பூ சேர்த்து காப்பு கட்டும் வழக்கம் உள்ளது

கடந்த ஆண்டுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகிப் பண்டிகையை நம் முன்னோர்கள் கொண்டாடினர் 

போக்கி என்பது மருவி போகி என்றாகிவிட்டது 


நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில் முதல் நாளாக வருவது போகி

வீட்டையும் நாட்டையும் தூய்மைப்படுத்துகின்ற வகையில் கொண்டாடப்படும் திருநாள் போகி

பழமைகளை பக்குவமாய் வழி அனுப்பி விட்டு  வளர்ச்சிக்கு  வளமை ஈட்டும்  புது வரவுகளை  மலர்ச்சியோடு வரவேற்கும் திருநாள் போகி

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

jallikattu : ஜல்லிக்கட்டு : தமிழர்களின் வீர விளையாட்டு

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுகளில் விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு   ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் ஜல்லிக்கட்டு   தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தனித்துவமாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் வழக்கம் இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது பின்னர் அதுவே பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டில் என்று அழைக்கப்பட்டது மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணம் முடிப்பு பரிசளிக்கப்படும் தைப்பொங்கல் திருநாளில் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் குளிர ...

Hibiscus natural medicine : செம்பருத்தி : சீன ரோஜா

  நலம் நல்கும் -செம்பருத்தி நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது  வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர். எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.                  செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.                நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.               உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அம...

celebrating pongal festival in tamilnadu : பொங்கல் பண்டிகை

  பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை          உழவுத் தொழிலுக்கும்,   உழவர்களுக்கும்,   மரியாதை செலுத்தும் திருநாள்    பொங்கல் திருநாள்.   தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.