Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது. Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள். Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும். வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ள...
நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்: Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin) நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். வேறு பெயர்கள்: சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை பெயர் காரணம்: தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும். மலச்சிக்கல் நீங்க: அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும். மரு: ...