முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை


 Manathakkali keerai

வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை



     காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.

    Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.

    Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.

    வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.

    மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையாக மணத்தக்காளி உள்ளது அத்தோடு செரிமான கோளாறை சரி செய்யும்.

   வயிற்றுப் புண்ணை குணமாக்குவதோடு வாய்ப்புண்ணையும் குணமாக்கும் தன்மை கொண்டது மணத்தக்காளி கீரை.

   பச்சை இலைகளை எடுத்து நெய் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குறையும். பச்சை இலைகளை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வாய்ப்புண் விரைவில் குறையும்.

    மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறையும்.

    வெயிலினால் ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு, தோல் அலர்ஜி போன்றவற்றின் மேல் மணத்தக்காளி கீரையின் சாற்றை தடவி வர விரைவில் குணமாகும். கண்பார்வை தெளிவு பெறும்.

    மூட்டு பகுதியில் ஏற்படும் வீக்கம் குறைய, மணத்தக்காளி இலைகளை வதக்கி ஒத்தடம் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

   மஞ்சள் காமாலையினால் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தீர மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள் போன்றவர்கள் தொண்டை வறண்டு போகும் அளவிற்கு பேசும் போதும் பாடும் போதும் தொண்டை கட்டிக் கொள்வதோடு வீக்கம் மற்றும் புண்கள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மணத்தக்காளி கீரையை உணவில் அடிக்கடி எடுத்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    குறைந்த அளவில் நீரை பருகுவதால் சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனை கரைக்கவும் நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றவும் மணத்தக்காளி கீரை பயன்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Republic day : குடியரசு தினம்

  ஜனவரி 26 குடியரசு தினம்                             குடியரசு என்றால் மக்களாட்சி என்று பொருள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையே  குடியரசு ஆட்சி முறையாகும்.           இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாக அமைந்ததைக் கொண்டாடும்   நாள் தான் குடியரசு தினம்.            1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலச்சாரி ஜனவரி 26 ஆம் தேதி காலை 10:18 மணிக்கு இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்தார்.           பின்னர் இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.           அப்போதைய அரசு மாளிகை மற்றும் இன்றைய ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் அரங்கில் அவர் பதவியேற்ற பிறகு 10:30 மணிக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவ...

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:   ...

jallikattu : ஜல்லிக்கட்டு : தமிழர்களின் வீர விளையாட்டு

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுகளில் விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு   ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் ஜல்லிக்கட்டு   தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தனித்துவமாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் வழக்கம் இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது பின்னர் அதுவே பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டில் என்று அழைக்கப்பட்டது மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணம் முடிப்பு பரிசளிக்கப்படும் தைப்பொங்கல் திருநாளில் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் குளிர ...