முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி


நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

தாவரவியல் பெயர்:  Euphorbia hirta

குடும்பம்: Euphorbiaceae

    இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)

    நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

 வேறு பெயர்கள்:

    சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை

 பெயர் காரணம்:

    தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.

 மலச்சிக்கல் நீங்க:

    அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.

 மரு:

    மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

 வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்க: 

     நெய்யில் அம்மான் பச்சரிசி இலைகளையும் பாசிப்பருப்பையும் போட்டு வதக்கி சாப்பிட வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும்.

ஆண் , பெண் பாலின பிரச்சனை:

   பெண் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். கருவுறுதலை எளிதாக்கும். அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து பாலில் கலந்து இருபத்தி ஒரு நாட்கள் காலையில் குடித்து வர ஆண்மை பிரச்சனை சரியாகும்.

 வீக்கம் மற்றும் கொப்புளங்கள்:

    வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் இதன் இலைகளை அரைத்து பற்றுப்போட குணமாகும்.

 நகச்சுத்தி:

    அம்மான் பச்சரிசி பாலை நகச்சுத்தி உள்ள இடத்தில் விட்டு வர நகச்சுத்தி குணமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

jallikattu : ஜல்லிக்கட்டு : தமிழர்களின் வீர விளையாட்டு

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுகளில் விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு   ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும் மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதுதான் ஜல்லிக்கட்டு   தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் தனித்துவமாக திகழ்கிறது ஜல்லிக்கட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடும் வழக்கம் இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது பின்னர் அதுவே பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டில் என்று அழைக்கப்பட்டது மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணம் முடிப்பு பரிசளிக்கப்படும் தைப்பொங்கல் திருநாளில் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன கொல்லக்கூடிய காளையை தழுவி போரிட்டு அடக்குவதால் குளிர ...

Hibiscus natural medicine : செம்பருத்தி : சீன ரோஜா

  நலம் நல்கும் -செம்பருத்தி நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது  வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர். எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.                  செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.                நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.               உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அம...

celebrating pongal festival in tamilnadu : பொங்கல் பண்டிகை

  பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை          உழவுத் தொழிலுக்கும்,   உழவர்களுக்கும்,   மரியாதை செலுத்தும் திருநாள்    பொங்கல் திருநாள்.   தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.