முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Manathakkali keerai : வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை

 Manathakkali keerai வயிற்றுப் புண்ணை சரி செய்யும் மணத்தக்காளி கீரை      காலை உணவை தவிர்ப்பதாலும் , நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக கார உணவுகளை உண்பதாலும் வயிற்றிலும், குடல் பகுதியிலும், வாயிலும் புண்கள் ஏற்படுகிறது.     Duodenal ulcer அதாவது முன்கடலில் ஏற்படும் புண் காரணமாக வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகள்.     Gastric ulcer அதாவது இரை பையில் புண் இருந்தால் பசி குறைவாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்படுதல் மற்றும் நெஞ்செரிச்சல் இதன் அறிகுறிகள் ஆகும்.     வயிற்றுப் புண்களை கட்டுப்படுத்த வல்லது மணத்தக்காளி. இதில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. மேலும் புரோட்டின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஓர் உணவாக உள்ளது.     மலச்சிக்கலுக்கு சிறந்த மருத்துவ நிவாரணையா

Amman Bacharisi : நலம் நல்கும் அம்மான் பச்சரிசி

நலம் நல்கும் அம்மான் பச்சரிசி தாவரவியல் பெயர்:  Euphorbia hirta குடும்பம்: Euphorbiaceae     இதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்: பெடூலின், ஆல்ஃபா அமைரின்(Alpha-amyrin), கேம்பால்(camphol), குவர்சிடின்(Quercitin), யூபோர்பின்(Euphorbin)     நம்முடைய முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இவை பார்ப்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.  வேறு பெயர்கள்:     சித்திர வல்லாதி, சித்திர பாலாவி, சித்திர பாலாடை  பெயர் காரணம்:     தோற்றத்திலும் சுவையிலும் சிறு சிறு அரிசி குருணைகள் போல காணப்படுவதால்'பச்சரிசி'என்றும் தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால்'அம்மான்'என்ற அடைமொழியும் சேர்த்து அம்மான் பச்சரிசி என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் கூர்மையாக இருக்கும் . இதன் மெல்லிய தண்டை உடைத்தால் பால் வடியும்.  மலச்சிக்கல் நீங்க:     அம்மான் பச்சரிசி இலைகளோடு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். அத்தோடு உடல் சூட்டையும் தணிக்கும்.  மரு:     மருவின் மீது அம்மான் பச்சரிசி பாலை தடவி வந்தால் மரு உதிரும்.

Cancer :புற்றுநோய்

Cancer : புற்றுநோய்      உடலானது பல கோடி செல்களினால் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக செல்கள் இரண்டாக பிளவு படும். அவை மடியும் போது புதிய செல்கள் உருவாகி அவற்றை ஈடு செய்யும்.      செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் வரும் நோய் தான் புற்றுநோய்.      புற்றுநோய் என்பது உடல் செல்களின் அசாதாரண பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது. ரத்தப் புற்று நோய் (leukaemia) போன்ற குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், பெரும்பாலான புற்றுநோய் செல்கள் கட்டிகளின் வடிவத்தில் காணப்படுகின்றன.      ரத்த புற்று நோய், ரத்த உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜையின் திசுக்களை பாதிக்கிறது. இந்த வகை புற்றுநோய் அபாயகரமானது. புற்றுநோயின் வகைகள்:- 1. பரவா புற்றுநோய் (benign) இது உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவது இல்லை. மெதுவாக வளரும். ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை தேவை. 2. பரவும் புற்றுநோய் (malignant)      புற்றுநோய் உறவாகும் போது செல்கள் அசாதாரணமாக பிரிந்து, கட்டிகள் எனப்படும் வளர்ச்சியை உருவாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் குருதி வழியாகவோ , நிணநீர் வழியாகவோ உடலில் மற்ற பாகங்களுக்கு பரவும். உலக சுகாதார நிறுவனம் ஐந்து முக்

World cancer day : உலக புற்றுநோய் தினம்

  உலக புற்றுநோய் தினம் (World cancer day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்று நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணி திரட்டுவதற்கான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சியின் பயனாக பல உயிர்கள் மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றது      1993ல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.      பாரிசில் நடைபெற்ற புற்று நோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் பிப்ரவரி நான்காம் நாளை உலகப் புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்று நோய்க்கு எதிரான பாரிஸ் சாசனத்தில் கையெழுத்திட்டனர்.      புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பல புற்றுநோய் மற்றும் சுகாதார நிறுவனங்களின் இலக்காக புற்றுநோய் தினம் வந்துள்ளது. புற்று நோயின் தீவிர அபாயத்தை பற்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்ப